வேலூர் சி.எம்.சி.மருத்துவமனை பஸ் நிறுத்தம் (கோட்டை தபால் நிலையம்), நேஷ்னல் தியேட்டர் பஸ் நிறுத்தம் (பென்ஸ் பார்க் எதிரே) கால்வாய் கட்டும் பணிக்காக பயணிகள் நிழற்குடையை அகற்றினார்கள். அங்கு, இன்னும் ஒரு சிறிய அளவிலான பயணிகள் நிழற்குடையை கூட கட்டித்தர வில்லை. மக்கள், நோயாளிகள் மழை, வெயிலில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பயணிகள் நிழற்குடையை கட்டித்தர வேண்டும்.
-சுரேஷ், தோட்டப்பாளையம்.