கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கிறார்கள். கோவிலில் பெண்கள் முட்டைகளை வைத்து விற்பனை செய்கிறார்கள். கோவில் உள்ளேயே முட்டைகளை சுத்தம் செய்து தரம் பிரிக்கும் பணியை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. ஆஞ்சநேயர் கோவிலில் நடக்கும் இச்செயல் பக்தர்களுக்கு மனசங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்க வேண்டும்.
-கவிதா, கண்ணமங்கலம்.