திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடக்கும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வருகிறார்கள். அவ்வாறு வரும் பொது மக்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உரிய இருக்கை வசதி இல்லாததால் பொதுமக்கள் பல மணி நேரம் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு தேவையான இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.
-ராஜா, திருவண்ணாமலை.