சோளிங்கர் தாலுகா குன்னத்தூர் ஊராட்சியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கு ஒரு பக்கம் மட்டுமே சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. மற்ற 3 பக்கமும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. ஆனால், பள்ளியைச் சுற்றி 3 பக்கமும் விவசாய நிலங்கள் உள்ளன. அந்த நிலத்துக்காரர்கள் பள்ளிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் பள்ளி இடத்திலேயே கடையும் கட்டப்பட்டுள்ளது. பள்ளிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் விட்டு விட்டு மீதமுள்ள இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை தொடங்கி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு சொந்தமான நிலத்தை சர்வே செய்து மீட்டெடுத்து, அந்த இடத்தையும் சேர்ந்து சுற்றுச்சுவர் அமைப்பார்களா?
-பொதுமக்கள், குன்னத்தூர்.