திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு அலுவலக வேலை நாட்களில் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். பொதுமக்களுக்காக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகில் பொதுச்சுகாதார வளாகம் கட்டப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு பயன்பாட்டுக்கு வந்தது. இங்கு போதிய தண்ணீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் அசுத்தமாக காணப்படுகின்றது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், திருவண்ணாமலை.