நாட்டறம்பள்ளியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையம் எதிரே உள்ள பயணிகள் நிழற்குடை உடைந்தும், சிதைந்தும் மேற்கூரை இல்லாமல் உள்ளது. பயணிகள் நிழற்குடையைச் சுற்றிலும் செடிகள் வளர்ந்து காடுபோல் உள்ளது. அங்கு பயணிகள் அமருவதற்கே அச்சமாக உள்ளது. புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டித்தருவார்களா?
நடராஜன், புதுப்பேட்டை.