வாகனங்களால் சாலை ஆக்கிரமிப்பு

Update: 2022-08-25 14:59 GMT

ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையத்தில் வேம்புலியம்மன் கோவிலில் இருந்து எம்.பி.டி சாலை செல்லும் பாதை முழுவதும் இருசக்கர வாகனங்களும், கார் உள்ளிட்ட வாகனங்களும் நிறுத்தப்படுகின்றன. மேலும் இங்குக் கடை வைத்திருப்பவர்களும், முன்பக்கம் உள்ள சாலைகளை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இந்தச் சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.பரஞ்சோதி, ராணிப்பேட்டை.

மேலும் செய்திகள்