பேரணாம்பட்டு சாலபேட்டை சவுக்கு ரோட்டில் அம்பேத்கர் சிலை அருகில் குடிநீர் திறப்பதற்கான பள்ளத்தை நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. அந்த வழியாக செல்லும் சிறுவர், சிறுமிகள் பள்ளத்தில் விழுந்து செல்கிறார்கள். ஆபத்தை ஏற்படுத்தும் பள்ளத்துக்கு மூடி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு.