அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் அம்பாபூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட உடையவர் தீயனூர் கிராமத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே செல்லும் ஓடை மருதையாற்றில் கலக்கிறது. இந்த ஓடை ஆழமின்றி இருப்பதுடன், வரத்து வாரியும் முறையாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் ஓடையில் செல்லும் தண்ணீர் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகிறது. எனவே ஓடையை தூர்வாரி ஆழப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.