கரூர் மாவட்டம் தாந்தோன்றி ஒன்றியம் மணவாடி மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. வேலைக்குச் செல்வோர், விவசாயிகள் உள்ளிட்டோர் தங்களது வங்கிக் கணக்கில் வரும் பணத்தை எடுக்க தாந்தோன்றிமலை, வெள்ளியணை பகுதிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் கால விரயமும், அலைச்சலும் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் வசதிக்காக மணவாடியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.