புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் வாரச்சந்தை நடைபெறும் பகுதிக்கு ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்களும் அமைந்துள்ளதால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் வாகனங்கள் அதிவேகமாகச் செல்வதால் சந்தைக்கு வரும் பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகள் அச்சத்துடன் சாலையைக் கடக்கின்றனர். எனவே அதிவேகமாகச் செல்லும் வாகனங்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலைகளில் நடைபாதை வசதி ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.