பெரம்பலூர் மாவட்டம் செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி நுழைவாயில் எதிரே மகளிர் சுகாதார வளாகத்தை ஒட்டி வெட்டப்பட்ட மரக்கிளைகள் பல மாதங்களாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கின்றன. மழையால் அங்கு செடி, கொடிகள் வளர்ந்து கொசுக்கள், புழு, பூச்சிகள் உருவாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. பள்ளி, அங்கன்வாடி மையம், இ-சேவை மையம் உள்ளிட்டவை அருகில் இருப்பதால் பாம்பு உள்ளிட்ட விஷ உயிரினங்களால் ஆபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே குவிந்து கிடக்கும் மரக்கிளைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.