சத்தியமங்கலத்தில் இருந்து கோபிசெட்டிபாளையம் செல்லும் 4 வழிச்சாலையில் உள்ள மூலவாய்க்கால் பகுதியில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக இரு மற்றும் 4 சக்கர வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதன் காரணமாக அந்த வழியாக சாலையில் நடந்து செல்பவர்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே வேகத்தடை அமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.