திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி ஊராட்சியில் 100-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. பள்ளி, ரேசன் கடை, பஸ் நிறுத்தம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நாய்கள் சுற்றுவதால் மாணவர்கள், பொதுமக்கள், கர்ப்பிணிகள் மற்றும் சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். நாய்கள் கடித்த சம்பவங்களும் நடந்துள்ளதால், மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க தெருநாய்களை பிடித்து கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.