நடவடிக்கை தேவை

Update: 2026-11-01 16:41 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு எஸ்.ராமச்சந்திராபுரம் இந்திரா காலனி 9-வது வார்டு பகுதியில் பெண்கள் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிட பணிகள் நிறைவடைந்து நீண்ட காலம் ஆகியும் தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் அப்பகுதி பெண்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் கட்டப்பட்ட பெண்கள் சுகாதார நிலையத்தை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்