மதுரை மாவட்டம் கூடல்நகர் பகுதிகளில் சாலையில் கால்நடைகள் அதிகளவில் திரிகின்றன. இதனால் அவ்வப்போது விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. இரவு நேரத்தில் சாலையில் கால்நடைகள் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். சில நேரங்களில் பாதசாரிகளை மாடுகள் முட்டி காயம் அடைகின்றனர். சாலையில் சுற்றும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் முன்வருவார்களா?