சத்திரப்பட்டி ஊராட்சி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் வரும் நோயாளிகளுக்கு மாத்திரைகள் கொடுக்கும் போது எந்த மாத்திரைகளை எப்போது பயன்படுத்த வேண்டும் என்ற விவரங்கள் எழுதப்பட்ட கவர் வழங்குவதில்லை. இதனால் முதியோர்களுக்கு எந்த மாத்திரைகளை எந்த நேரத்தில் உட்கொள்ள வேண்டும் என தெரியாமல் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் விரைந்து தீர்வு காண வேண்டும்.