விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த தெருநாய்கள் அப்பகுதி பொதுமக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்களை துரத்தி சென்று கடிப்பதுடன் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு குறுக்கே பாய்ந்து விபத்துகளையும் ஏற்படுத்துகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த விரைந்து முன்வர வேண்டும்.