தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நாலாங்குறிச்சி கிராமத்தில் பழைய வேதக்கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்துள்ளதாக மாரியப்பன் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து பழைய மின்கம்பம் அகற்றப்பட்டு புதிய மின்கம்பம் நடப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்ைக மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.