உளுந்தூர்பேட்டை அருகே திருப்பெயர் கிராமத்தில் சுடுகாட்டுக்குச் சொந்தமான நிலம் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடமின்றி, ஏற்கனவே உடல் புதைக்கப்பட்ட இடத்திலேயே மீண்டும் மற்றொரு உடலை அடக்கம் செய்யும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி, சுடுகாட்டுக்கு உரிய நிலத்தை மீட்டுத் தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.