பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியம், பேரளி கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள ஏரியின் கரைகள் மற்றும் கடைக்கால் பகுதிகளில் ஏற்பட்ட உடைப்புகள் நிரந்தரமாகச் சீரமைக்கப்படாமல் உள்ளன. இதனால் மழைக்காலத்தில் வரும் நீரை ஏரியில் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஏரியின் கரைகள் மற்றும் கடைக்கால் பகுதிகளை நிரந்தரமாகச் சீரமைத்து, நீரைத் தேக்கி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.