நோய் தொற்று ஏற்படும் அபாயம்

Update: 2024-07-21 19:47 GMT

திருவண்ணாமலை பெரிய கடை தெரு காய்கறி மார்க்கெட் தெருவில் பாதாள சாக்கடை உடைந்து சுமார் ஒரு வாரமாக மக்கள் நடமாடும் பகுதியில் கழிவுநீர் வெளியேறி வருகிறது. காய்கறி மார்க்கெட் பகுதியில் காலை முதல் இரவு வரை மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும். கழிவுநீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரஜினி. திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்