ஆற்காட்டில் உள்ள கலவை சாலையில் இறைச்சிச்கடைகள் பல உள்ளன. இந்தக் கடைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கடையின் முன்பாகவே சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது. கழிவுநீரை கடையின் முன்பாக தேங்க விடுகின்றனர். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் கொசுக்கள் மற்றும் ஈக்கள் காணப்படுகின்றன. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. துர்நாற்றமும் வீசுகிறது. அந்த வழியாக செல்லும் நபர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்படுமா?
-ஆதிகேசவன், ஆற்காடு.