அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கல்லுட்டை பகுதியில் 1963-ம் ஆண்டு கட்டப்பட்ட தொடக்கப் பள்ளி உள்ளது. அந்தப் பள்ளிக்கட்டிடம் பழுதடைந்துள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் வகுப்பறைக்குள் கசிகிறது. எந்த நேரத்திலும் பள்ளிக்கட்டிடம் இடிந்து விழும் அச்சம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய பள்ளிக்கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
-சுதாகர், கல்லுட்டை.