வேலூர் அண்ணா சாலை அருகே கோட்டை பூங்காவில் பெரிய மரம் ஒன்று உள்ளது. அந்த மரத்தின் கிளை கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீரென முறிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதால் அங்கு பொதுமக்கள் யாரும் இல்லை. எனவே எந்த ஒரு விபத்தும் ஏற்படவில்லை. ஆனால் அந்த மரக்கிளை அப்படியே கிடக்கிறது. இதனால் பூங்காவுக்கு பொழுதைக் கழிக்க வரும் பொதுமக்கள் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முறிந்து விழுந்த மரக்கிளையை அகற்ற முன்வர வேண்டும்.
-மாயவன், வேலூர்.