சத்துவாச்சாரி நேதாஜி நகர் மந்தவெளி பகுதியில் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து பள்ளிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது மழை பெய்வதால் அந்த பகுதி முழுவதும் குளம் போல் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, -மாணவிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். சைக்கிளில் செல்லும் மாணவர்கள் தடுமாறி கீழே விழுகின்றனர். ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த சாலையை விரைந்து சரி செய்ய வேண்டும்.
-குமார், நேதாஜிநகர்.