பூட்டியே கிடக்கும் பொதுச் சுகாதார வளாகம்

Update: 2025-04-13 19:36 GMT

திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் சார் பதிவாளர் அலுவலகம், சார் கருவூலம், தாசில்தார் அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ஏற்படுத்தப்பட்ட பொது சுகாதார வளாகம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கண்ணன், திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்

மயான வசதி