தபால் அலுவலகத்தை இடமாற்றம் செய்ய வேண்டும்

Update: 2023-12-24 17:24 GMT

கண்ணமங்கலம் தபால் அலுவலகம் ஏற்கனவே ஆலஞ்சி குலாம் மொய்தீன் தெருவில் தனியாருக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. அதை தொடர்ந்து புதுப்பேட்டை எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ஓய்வுபெற்ற ராணுவவீரர் வீட்டை வாடகைக்கு எடுத்து தபால் அலுவலகத்தை மாற்றம் செய்தனர். அங்கு, தபால் அலுவலகம் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி கண்ணமங்கலம் தபால் அலுவலகத்தை வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும்.

-அரவிந்த், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்