மாசடைந்த குளம்

Update: 2025-07-27 17:38 GMT

வாலாஜா தாலுகா அலுவலகம் அருகில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாலாஜா நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்தது நல்ல தண்ணீர் குளம். அந்தக் குளம் மாசு அடைந்துள்ளது. குளத்தில் குப்பைக் கழிவுகள் வீசப்படுகின்றன. குளத்தை சுற்றிலும் ஆக்கிரமித்துக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கழிவுநீர் குளத்தில் விடப்படுகிறது. நல்ல தண்ணீர் குளத்தை நகராட்சி நிர்வாகம் சீரமைத்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கண்ணன், வாலாஜா.

மேலும் செய்திகள்