போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2022-11-02 11:05 GMT

கலவை பேரூராட்சியில் அப்பாதுரைபேட்டையில் அங்காளம்மன் கோவில், கமலக்கண்ணி கோவில், ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. ஆஞ்சநேயர் கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று உள்ளது. அதையொட்டி மரங்கள் உள்ளன. மரங்களின் மறைவில் எந்நேரமும் மது பிரியர்கள் மதுபானம் குடித்து வருகின்றனர். காலிப்பாட்டில்களை அங்கேயே போட்டு உடைக்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் நிழலுக்காக அங்குள்ள மரங்களின் கீழே ஒதுங்குகின்றனர். இதனால் பக்தர்களுக்கு சிரமமாக உள்ளது. குடிநீர் தொட்டி அருகே மதுபானம் குடிப்பவர்களை காவல் துறையினர் விரட்டியடிக்க வேண்டும்.

-சுரேஷ், சமூக ஆர்வலர், கலவை.

மேலும் செய்திகள்

மயான வசதி