செடி, கொடிகள், புதர்களை அகற்ற வேண்டும்

Update: 2022-09-25 16:41 GMT

கலவையில் திமிரி சாலையில் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் சாலை ஓரத்தில் பெரிய புதரும், செடி, கொடிகளும் வளர்ந்துள்ளது. அந்தப் புதரில் பாம்பு ஒன்று இருப்பதாக நேற்று மருத்துவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். எனவே மருத்துவமனை முன்பக்கம் உள்ள செடி, கொடி, புதர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்பது டாக்டர்கள், நோயாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

-உமா, கலவை.

மேலும் செய்திகள்