நிழற்குடையை சூழ்ந்த செடிகள்

Update: 2024-09-22 20:01 GMT

அணைக்கட்டு ஒன்றியம் செதுவாலையில் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரில் இருந்து ஆம்பூரை நோக்கி செல்லும் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. அந்த நிழற்குடை பகுதியில் முள்செடிகள் வளர்ந்து, சூழ்ந்துள்ளது. இது, பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடை பகுதியில் வளர்ந்துள்ள முள் செடிகளை அகற்றுவார்களா?

-சூரியகுமார், அணைக்கட்டு. 

மேலும் செய்திகள்