வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் உள்ள தெருக்களில் பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பன்றிகள் தொல்லையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பன்றிகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக கொட்டகை அமைத்து வளர்க்க உத்தரவிட வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் வளர்க்க தடை விதிக்க வேண்டும்.
-நாகராஜன், அப்துல்லாபுரம்.