பன்றிகள் தொல்லை

Update: 2023-02-19 17:35 GMT

சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அரசு கால்நடை மருத்துவமனை அருகே திட மற்றும் திரவ கழிவுநீர் கிடங்கில் மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் எனத் தரம் பிரிக்கப்படுகிறது. அங்கு குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை ஏராளமான பன்றிகள் கிளறி விடுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. பன்றிகள் தூய்மைப் பணியாளர்களை அச்சுறுத்துகின்றன. நகராட்சி நிர்வாகம் பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதவன், சோளிங்கர்.

மேலும் செய்திகள்