வேலூர் மாநகராட்சியில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகன விபத்துகளும் நடக்கிறது. விபத்துகளுக்கு சாலைகளில் அவிழ்த்து விடும் மாடுகளும் ஒரு காரணமாக அமைகிறது. வேலூர் நகரின் பல்வேறு இடங்களில் மாடுகள் சாலையை ஆக்கிரமித்துள்ளன. வாகன ஓட்டிகளுக்கு இடையூறு அளிக்கும் வகையில் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொள்வதும், சாலையிலே படுத்து தூங்குவதும் என மாடுகளின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. சத்துவாச்சாரி பகுதியில் பல இடங்களில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. அவை சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலும் சுற்றி திரிகின்றன. இதனால் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. அதிகாரிகள் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
-ஆல்பர்ட், வேலூர்.