ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களில் பலருக்கு குடும்ப அட்டை அச்சிடப்பட்டு அந்தந்த தாலுகா அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம், எனக் குறுஞ்செய்தி வந்து 2 மாதங்கள் ஆகியும் குடும்ப அட்டை கொடுத்தால் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிப்பார்கள் எனக் கருதி தாலுகா அலுவலகங்களில் குடும்ப அட்டை தர மறுக்கிறார்கள். மேலும் குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்த பலரின் விண்ணப்பம் மனு ஏற்கப்படாமல் 4 மாதங்களாக நிலுவையில் உள்ளன. இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-விமல்குமார், ராணிப்பேட்டை.