வேலூர் கோட்டை வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கோட்டையைச் சுற்றி பார்க்க நடந்து செல்கின்றனர். அங்கு அருங்காட்சியகம் செல்லும் வழியில் பட்ட மரம் ஒன்று ஆபத்தான நிலையில் உள்ளது. காற்றடிக்கும் போதெல்லாம் அந்த மரத்தின் கிளைகள் முறிந்து கீழே விழுகிறது. இதனால் அந்தப் பகுதியில் நடந்து செல்லும் பொது மக்கள் அச்சத்தில் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள பட்டமரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாலன், வேலூர்.