வேலூர் சத்துவாச்சாரி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்கள் அமர்வதற்காக இருக்கை வசதி அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மின்விசிறிகள் உடைந்தும் பழுதாகியும் காணப்படுகிறது. இதனால் கைக்குழந்தைகளை கொண்டு வரும் நோயாளிகள் பெரும் அவதிப்படுகின்றனர். அதுபோக மருத்துவமனை வளாகத்தில் நாய்கள் தொல்லையும் இருப்பதால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நோயாளிகளின் சிரமத்தை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்டீபன், சத்துவாச்சாரி.