பயணிகள் நிழற்குடை வசதி

Update: 2024-09-08 20:04 GMT

வேலூரை அடுத்த புதுவசூர் பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அங்கு வேலூர்-ஆற்காடு சாலையில் பயணிகள் நிழற்குடை வசதி உள்ளது. ஆனால், இந்தப் பக்கம் தீர்த்தகிரி முருகன் கோவில் ஆர்ச் எதிரே ஆற்காடு-வேலூர் சாலையில் பயணிகள் நிழற்குடை இல்லை. பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலிலும், மரத்துக்கு கீழேயும் நிற்கின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்குடை வசதி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாகராஜன், புதுவசூர். 

மேலும் செய்திகள்