வேலூர் மாவட்டம் குடியாத்தம் நேதாஜி சவுக் பஸ் நிறுத்தத்தில் இருந்து தினமும் ஆம்பூர், மேல்பட்டி, பேரணாம்பட்டு போன்ற ஊர்களுக்கு பயணம் செய்கின்றனர். தற்போது பெய்து வரும் திடீர் மழை, சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் ஒதுங்கக்கூட போதிய நிழற்குடை வசதி இல்லை. எனவே நேதாஜி சவுக் பகுதியில் பயணிகள் அமர நிழற்குடை வசதி அமைத்துத்தர அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிகாரிகள் முன் வர வேண்டும்.
-ஜெ.மணிமாறன், பேரணாம்பட்டு.