செங்கம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்துக்கு வந்து செல்லும் பொதுமக்கள் தங்களின் இரு சக்கர வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லை. இதனால், அங்குள்ள சாலையில் வாகனங்களை நிறுத்துகிறார்கள். இதனால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உபயோகத்தில் இல்லாத பழைய கட்டிடத்தை இடித்து விட்டு அந்த இடத்தை வாகன நிறுத்துமிடமாக பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஓய்வு பெற்ற மாவட்ட வருவாய் அதிகாரி க.சண்முகம், செங்கம்.