திருப்பத்தூர் கச்சேரி தெருவில் உள்ள அரசு வங்கி, வட அக்ரகார தெருவில் உள்ள அரசு வங்கி, மெயின் ரோட்டில் உள்ள அரசு வங்கி, தனியார் வங்கி உள்ளிட்ட எந்த வங்கிகளுக்கும் வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் நடு ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்துகிறார்கள். இதனால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படுகிறது. அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கும், பள்ளிகளுக்கும் செல்ல முடியவில்லை. உடனடியாக வாகன நிறுத்துமிட வசதி ஏற்படுத்தி தர மேற்கண்ட வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதேஸ்வரன், திருப்பத்தூர்.