வணிக வளாகங்களில் பார்க்கிங் வசதி தேவை

Update: 2025-05-04 20:23 GMT

வாலாஜா நகராட்சி பகுதியில் புதிதாக கட்டப்படும் தனியார் வணிக வளாகங்களில் பார்க்கிங் வசதி அவசியமாகும். இதனால் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தலாம். போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம். வாலாஜா தேசிய நெடுஞ்சாலைகளில் நாளுக்கு நாள் வணிக வளாகங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அந்த வணிக வளாகங்கள் முன்பு போதிய பார்க்கிங் வசதி இல்லை. இதனால், போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே வணிக வளாகங்களில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துக்குமார், வாலாஜா. 

மேலும் செய்திகள்