வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்தின் போது புகார் அளிக்க வரும் பொதுமக்கள் சிலர் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அவற்றை தடுக்கும் வகையில் அங்கு தீயணைப்பதற்காக மணல் வாளிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வெல்மா உணவகம் அருகே 2 தீயணைப்பு வாளிகள் தலைகீழாக தரையில் கவிழ்த்து வைக்கப்பட்டு இருந்தன. மற்றொரு வாளியில் கடையில் போண்டா, வடைகளை வாங்கி சாப்பிட்டு விட்டு அதன் பேப்பரை சுருட்டி வாளியில் போட பயன்படுத்துகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மணல் நிரப்பி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
-மாதவன், வேலூர்.