அரக்கோணம் ரெயில் நிலைய நுழைவுப்பகுதி அருகே ‘லிப்ட்’ பகுதிக்கு செல்லும் வழியில் இரும்புத்தடுப்புக்கு குறுக்கே சிமெண்டு தூண் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வயது முதிர்ந்தவர்கள், பச்சிளம் குழந்தைகளுடன் வரும் பெண்கள் சிமெண்டு தூணை தாண்டி செல்ல சிரமப்படுகின்றனர். இதை, ரெயில்வே அதிகாரிகள் பரிசீலனை செய்து, பயணிகளுக்கு இடையூறு இல்லாத வழியை ஏற்படுத்தி தர வேண்டும்.
-சேகர், அரக்கோணம்.