தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காமராஜ்நகர் வடக்கு பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. ஆனால் இங்கு தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து காமராஜ்நகருக்கு செல்லும் வழியிலும் போதிய தெருவிளக்குகள் இல்லை. எனவே அங்கு தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.