திருச்செந்தூரில் வீரகாளியம்மன் கோவில் தெருவில் குடிநீரில் சாக்கடை கலந்து வினியோகம் செய்யப்படுவதாக கிருஷ்ணன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அங்கு சுத்தமான குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.