பாராட்டு

Update: 2022-08-06 08:33 GMT


கோபி நகரில் இருந்து தெப்பக்குளம் வழியாக பஸ் நிலையத்தில் செல்லும் ரோட்டில் கீரிப்பள்ள ஓடையின் மேல் தொங்கு பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அடியில் செடி, கொடிகள், ஆகாயத்தாமரைகள் வளர்ந்து படர்ந்து காணப்பட்டது. இதுபற்றிய செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் கீரிப்பள்ளம் ஓடையில் தொங்கு பாலத்தின் கீழ் உள்ள செடி-கொடிகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்கள். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளார்கள்.


மேலும் செய்திகள்