திருப்பூரில் நாய்கள் தொல்லை தீர்ந்தபாடிவில்லை. ஒவ்வொரு பகுதியிலும் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக நின்று குரைக்கிறது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியவில்லை. அந்த நாய்கள் கூட்டத்தின் வழியே சென்றால்,அவை வாகனத்தை துரத்துகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனத்துடன் கீழே விழுந்துவிடுகிறார்கள். இது என்றோ ஒருநாள் நடக்கும் நிகழ்வு அல்ல. தினம், தினம் மக்கள் அனுபவிக்கும் கொடுமை. இதற்கு தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.