தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன் கோட்டை கிராமத்தில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக தாலுகா அலுவலகம் அருகில் முத்துப்பேட்டை ரோடு , புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் போன்ற இடங்களில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளது. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள், முதியவர்கள் தெருவில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர்.இரு சக்கர வாகனத்தில் செல்வோரை நாய்கள் விரட்டி சென்று கடிக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெரு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பட்டுக்கோட்டை